NutriFreaks

ஒரு ‘டேப்பைக்’ கொண்டு உங்கள் fitness-ஐ எப்படி அளவிடுவது?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

உங்கள் உடலில் கொழுப்பு எவ்வளவு உள்ளது என்பது உங்கள் fitness-ஐ புரிந்துகொள்வதற்கான முக்கியமான அளவீடு ஆகும். உங்கள் உடலில் எத்தனை கிலோ கொழுப்பு உள்ளது என்பதை ஒரு அளக்கும் டேப் கொண்டு உங்களால் கணக்கிட முடியும்.

ஒரு நபரின் உயரம், கழுத்தின் சுற்றளவு, இடுப்பின் (waist) சுற்றளவு, hip-இன் சுற்றளவு இவற்றுக்கு இடையிலான விகிதாச்சாரத்தை கணக்கிடுவதன் மூலம் அவரது உடல் கொழுப்பு சதவீதத்தை (Body Fat Percentage) கண்டறிய முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

- உங்கள் சரியான உயரத்தை அளந்து கொள்ளுங்கள்.

- கழுத்தின் நடுப்பகுதியின் சுற்றளவை அளந்துகொள்ளுங்கள்.

- உங்கள் தொப்புளுக்கு 2 இஞ்சுகள் மேலே இடுப்பின் (waist) சுற்றளவை அளந்துகொள்ளுங்கள்.

- பெண்களுக்கு மட்டும் hip-இன் சுற்றளவும் தேவை. இடுப்பிற்கும், காலிற்கும் இடைப் பகுதியில் அதிக சுற்றளவு கொண்ட பகுதிதான் hip ஆகும். இந்த சுற்றளவையும் அளந்து கொள்ளுங்கள்.

- Body Fat Calculator என்ற பெயரில் இணையத்தில் நிறைய வலைப் பக்கங்கள் உள்ளன. அவற்றில் இந்த அளவீடுகளை உள்ளிட்டால் உங்கள் உடல் கொழுப்பு சதவீதத்தை (BFP) அது கணக்கிட்டுக் கூறும்.

உங்கள் (BFP) அளவை வைத்து நீங்கள் பருமனாக (obese) உள்ளீர்களா? இல்லை, கச்சிதமான (fit) உடற்கட்டுடன் இருக்கிறீர்களா என அறியலாம்.

பெண்கள்: 14-20% = தடகள வீரர் 21-24% = கச்சிதமான உடற்கட்டு 25-31% = சராசரியான உடற்கட்டு 32+% = பருமன்

ஆண்கள்: 6-13% = தடகள வீரர் 14-17% = கச்சிதமான உடற்கட்டு 18-24% = சராசரியான உடற்கட்டு 25+% = பருமன்

← Back to blogs