NutriFreaks

மதிய நேரத்து குட்டித் தூக்கம் நல்லதா? கெட்டதா?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

மதிய நேரம் கிடைக்கும் ஓய்வில் குட்டித் தூக்கம் போடுவது நிறைய பேருக்கு இருக்கும் பழக்கம் ஆகும். இந்த பழக்கம் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லதா கேட்டதா என்றால் அது முக்கியமாக எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் பொறுத்தது.

தூக்கம் 5 கட்டங்களைக் கொண்டது. அவை wake, N1, N2, N3 மற்றும் REM ஆகும். ஒருவர் தூங்கும்போது, இந்த 5 கட்டங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழும். இந்த மொத்த சுழற்சியும் 90 முதல் 110 நிமிடங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நடக்கும்.

மதிய நேரத்து குட்டித் தூக்கத்தின் நோக்கம் நம்மை நாம் புத்துணர்ச்சி ஆக்கிக்கொள்வதே. அதற்கு நாம் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே தூங்க வேண்டும். அப்படி செய்யும்போது, நாம் தூக்கத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்கு மட்டும் சென்றுவிட்டு எழுந்து விடுவோம். எழுந்த பின், நாம் மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வோம். N2, N3, REM போன்ற ஆழ்நிலை தூக்கக் கட்டங்களுக்கு சென்ற பின் எழுந்தால் மிகவும் அசதியாகவும், தூக்கச்சடவாகவும் இருக்கும். மேலும், அப்படி செய்வது இரவு தூக்கத்தைப் பாதிக்க கூடும். அதே போல் முடிந்தவரை மதியம் 3 மணிக்கு முன்பே தூங்கி எழுந்து விடுவது இரவு தூக்கத்தை கெடுக்காது.

← Back to blogs