2024-10-01 · NutriFreaks
மனித உடலில் 15% முதல் 20% புரதமே உள்ளது. நீருக்கு அடுத்தபடியாக உடல் புரதத்தால் ஆனதாகும். 70 கிலோ எடையுள்ள ஒருவரது உடலுக்குள் 10.5 முதல் 14 கிலோ புரதம் உள்ளது.
புரதம், அமினோ அமிலங்கள் (Amino Acids) எனப்படும் மூலக்கூறுகளால் ஆனதாகும். உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும், 9 வகை அமினோ அமிலங்களைத் தவிர. இவற்றை நாம் இன்றியமையாத அமினோ அமிலங்கள் (Essential Amino Acids) என்கிறோம். இவற்றை நாம் உணவின் வழியாகவே எடுத்துக் கொண்டாக வேண்டும். பால் பொருட்கள், இறைச்சி ஆகியவற்றில் இந்த 9 அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.
நாம் உண்ணும் உணவில் உள்ள புரதம் நமது இரைப்பை மற்றும் சிறுகுடலில் உள்ள அமிலங்கள் மற்றும் என்சைம்கள் மூலம் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. பின்னர் இவை உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
தசைகளை (Muscles) உருவாக்குதல், பழுதான தசைகளை சரிசெய்தல், தசை நாண்களை உருவாக்குதல் போன்றவை மட்டுமின்றி, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அடிப்படைத் தேவையான என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உருவாக்கம் மற்றும் ஆண்டிபாடி உருவாக்குதல் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு செயல்பாடுகளிலும் நாம் உண்ணும் புரதங்களின் பங்கு இன்றியமையாதது.
இனி பின்வரும் தலைப்புகளில் புரதத்தை பற்றி ஆழ்ந்து தெரிந்துகொள்வோம்:
ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு புரதம் உட்கொள்ள வேண்டும்? தினமும் நாம் தேவையான புரதத்தை உட்கொள்கிறோமா? நீண்ட காலம் நாம் போதுமான அளவு புரதம் எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்? சரியான அளவு புரதம் எடுத்துக் கொள்ள நம் உணவு முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
