NutriFreaks

4. உணவில் புரதப் பற்றாக்குறை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

கடந்த பதிவில் நமது அன்றாட உணவில் போதுமான அளவு புரதம் இல்லை என்பதைப் பார்த்தோம்.

நீண்டகாலம் நம் உணவில் புரத பற்றாக்குறை இருந்துவந்தால், உடலில் பல வகையான பிரச்சனைகள் எழும். பல நடுத்தர வயதினர் அனுபவித்துவரும் பல்வேறு உடல் நல சிக்கல்களுக்கு, முன்னர் அவர்கள் பின்பற்றிய தவறான உணவு முறையே காரணம்.

நீண்டகால புரதப் பற்றாக்குறை உண்டாக்கும் உடல்நலக் கேடுகளில் சிலவற்றை பார்க்கலாம்:

- உடலுக்கு தேவையான போதுமான அமினோ அமிலங்கள் கிடைக்காததால், ஏற்கனவே உள்ள தசையை உடைத்து, அதிலிருந்து கிடைக்கும் அமினோ அமிலங்களை உடல் தனது முக்கிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும். இதன் விளைவாக தசை இழப்பு ஏற்படும். உடல் வலுவிழக்கும்.

- ஆண்டிபாடி மற்றும் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க போதுமான புரதம் இல்லாததால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும்.

- தோல், நகம் மற்றும் தலைமுடி ஆகியவற்றை உருவாக்குவதும், பராமரிப்பதும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம்தான். எனவே, புரதப் பற்றாக்குறை, தோல் பிரச்சனைகள், பலவீனமான நகங்கள், தலைமுடி இழப்பு ஆகியவற்றை உருவாக்கும்.

- எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் இன்றியமையாதது. புரதப் பற்றாக்குறை ஆஸ்டியோபரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பலவீன நோய்களை உருவாக்கும்.

- உடம்பிலுள்ள திரவங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டு நீர்வீக்கம் (Edema) என்ற நோய் ஏற்படும்.

- தீவிரமான புரதப் பற்றாக்குறை கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளைப் பாதித்து அவற்றை செயலிழக்கச் செய்யும்.

கட்டுரையின் சுருக்கம் கருதி சில உடல்நல கேடுகள் மற்றும் அபாயங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. இது முழு பட்டியல் அல்ல.

ஆகவே, அன்றாடத் தேவையான புரத அளவை பூர்த்திசெய்யும் ஒரு சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றுவது ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படைத் தேவையாகும். அது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

← Back to blogs